முகப்பு

சுயகுறிப்பு

எங்கள் சேவை

  யாத்ரா விபரம்

தொகுப்பு

தொடர்புக்கு

தமிழ்English

 

அன்புள்ள யாத்ரீக சகோதர, சகோதரர்களுக்கு
                   நிர்வாகியின் அன்பு கலந்த வணக்கங்கள் எங்களது யாத்திரை எண்ணம் 1968 ல் ஆரம்பித்து இந்தியாவின் பல இடங்களுக்கு எனது நண்பன் இராகவனுடன் சேர்ந்தும் தனியாக நேரில் சென்றும் நான் பார்த்தவற்றை எல்லாரும் அனுபவிக்கும் விதமாக இந்த சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி உருவானது.
                   எனது முதல் புரோகிராமை கையால் எழுதி காஞ்சிபுரம் சென்றேன் பெரியவரின் ஆசிவேண்டி அவர் எனது புரோகிராம் பேப்பரில் குங்குமம் வைத்து ஆசிர்வதித்தார். இந்த நாளே எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள் ஆகும்.
                   1969-ல் 290 ரூபாயில் 30 நாட்கள் கொண்ட யாத்திரை புறப்பட்டது. இந்த 40 ஆண்டுகாலம் சிறப்பாக நடத்தி வருகிறேன். ஓவ்வொரு யாத்திரையும் ஒரு பிரசவத்திற்கு. இணையாக நினைத்துச் செயல்படுத்தி வருகிறேன்.
யாத்திரை சிறப்பாகச் செயல்பட காரணமாக இருப்பவர்களை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். நான் தெரியாமல் செய்த தவறுகளை எடுத்துச் சொல்லி என்னை திருத்திவர்கள், எனது சுற்றுலாவில் 25 வருடங்களாகத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளனர். எனது சுற்றுலாவில் உணவு, தங்குமிடம் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இவை எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்தித் தருகிறது, நான் கயிலாயம் மானசரோவர் சென்று வந்த நேரத்தில் என்பால் அன்புள்ளம் கொண்டவர்கள் எனக்காக, நல்லவிதமாகத் திரும்பி வர வேண்டும் என்பதற்காக இறைவனிடம் தினமும் சிவபுராணம் படித்து வேண்டிக் கொண்ட நல் இதயங்களுக்கு இருகரம் கூப்பி எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது 60 வயது நிறைவு யாத்திரை ஆரம்பித்து 40 வருடம் நிறைவு, திருக்கயிலை இரண்டாம் முறை சென்று வந்தது என முப்பெறும் விழாவாகச் சிறப்பாக நடக்க இனிய முகத்துடன் மனமுவந்து விளம்பரங்கள் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் கயிலைமணி T.M.வைத்தியநாதன் திரு Rtn. சுப்பராயன், திருமிகு, பொன்.முத்தையன், உயர் திரு.க.சதாசிவம் ஆசிரயர் அவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொன்கிறோம்,


நிர்வாகிகள்
S. சையத் சாதிக்
நந்தி,P.நாகராஜ்

 

 

For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathyellowpages.com-